“காசா சிறுவர் நிதியத்திற்கு” நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது 2024 ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
காஸாவில் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் “காசா சிறுவர் நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் (PMD) படி, பொதுமக்கள் மேலும் பங்களிப்புகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் வைப்புத்தொகை அனைத்தும் சமூக நல நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.