காட்டுப்பகுதிக்குள் சாரதி சடலமாக மீட்பு!!!
புத்தளம் நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் இலங்கை போக்குவரத்து சபை சாரதி என விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருப்பதுடன், பிள்ளைகள் இருவரும் வேறொரு இடத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வருவதாகவும், குறித்த நபர் தனியாக வசித்து வந்ததாகவும் விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளது.
நிகவெரட்டிய பிரதேச மரண விசாரணை அதிகாரி ரஞ்சித் தர்மசிறி சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணனையை மேற்கொண்டுளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நிகவெரட்டிய தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சுபசிங்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()