அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இவர் தனது காணிக்குள் சென்ற காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.