December 13, 2025
காணாமல் போன ஆரல் கடல்
News News Line Top Updates புதிய செய்திகள்

காணாமல் போன ஆரல் கடல்

Feb 10, 2024

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே அமைந்துள்ள ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கடல் உலகின் 4 ஆவது பெரிய கடலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆரல் கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தப்பட்ட நிலையில் 1960 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பித்தது.

இதன் மூலம் கஜகஸ்தான், உஸ்பகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத் தண்ணீர் திசைத் திருப்பப்பட்டது.

இப்பகுதியின் வடக்கில் அமைந்துள்ள சிர்தர்யா மற்றும் தெற்கில் அமைந்துள்ள அமுதர்யா ஆகிய 2 பெரிய ஆறுகளும் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைத் திருப்பி விடப்பட்டன.

இதன் மூலம் பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து 2010 இல் ஆரல் கடல் முழுவதும் ஆவியாகிவிட்டதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி நிலம் போல் மாறியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *