கொட்டாவை அதிவேக வீதிக்கருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று (01.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக நிலவிய துர்நாற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஒருவர் இன்று காணிக்கு சென்று பார்வையிட்டப்போது சடலத்தை கண்டு 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கின்றதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.