
காதலிக்காக அடிதடி: ஐவர் கைது…!!!
கண்டி – திகன பிரதேசத்தில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.