Tamil News Channel

காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் கைது!

images - 2024-10-30T104031.560

தனது காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் இன்று பயாகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பயாகல, பஹலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயாகல தியலகொட பிரதேச கடற்கரைக்கு இருவரும் வந்திருந்த நிலையில், இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதன்போது குறித்த யுவதியின் தலையில் கல்லால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கல்லை பொலிஸார் மீட்டதுடன், இளைஞரையும் கைதுசெய்திருந்தனர்.

குறித்த இளம் காதலர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

யுவதியைத் தாக்கியதற்கு பின்னர், சந்தேகநபர் இது தொடர்பில் தனது நண்பருக்கு அறிவித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட யுவதியை அம்பியூலன்ஸில் ஏற்றி களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயாகல, மகொன பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என்பதுடன்,  களுத்துறை நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts