யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here