November 14, 2025
காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண் திடீர் மரணம்…
புதிய செய்திகள்

காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண் திடீர் மரணம்…

Jun 24, 2024

யாழில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்து மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக, 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று, மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பெற்றுக்கொண்ட மருந்தை உட்கொண்ட பின்னர், நேற்று குறித்த பெண்ணின் உடல் நிலை மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *