closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருபவர்  நேற்று முன்தினம்(16) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவர் கார்த்திகை கிழங்கை உட்கொண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48)  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார்.

அதனை அடுத்து, அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here