February 9, 2026
காலநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு  எச்சரிக்கை..!
Updates புதிய செய்திகள்

காலநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை..!

Mar 20, 2024

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (20) பல மாகாணங்களில்,  அதிக வெப்பநிலை  காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற வறட்சியான வானிலையில் இன்று முதல், விசேடமாக தென் அரைப்பிராந்தியத்தில் தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *