December 14, 2025
காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு
News News Line Top புதிய செய்திகள்

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

Mar 21, 2024

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *