Tamil News Channel

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா? இனிமேல் தவிர்க்காதீர்கள்..!

எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ள கூடிய எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ குணங்களும்,ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது.

இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. காலையில் எலுமிச்சை தண்ணீரை  குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

எலுமிச்சை தண்ணீரின் நன்மைகள்

காலையில் சூடான அல்லது குளிர்ந்த நீரில் எலுமிச்சையைச் கலந்து குடிப்பதால் நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

தண்ணீர் குடிக்க சோம்பேறித்தனம் கொண்டவர்கள் தண்ணீரில் சிறிது எழுமிச்சை சாறு கலந்து குடிப்பதால்,அதன் சுவை தண்ணீர் குடிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்கும் துணைப்புரிகின்றது.

எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக ஹெஸ்பெரிடின் மற்றும் டையோஸ்மின் போன்ற ஃபிளாவனாய்டுகள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் வீக்கத்தை குறைக்க உதவுவதுடன் உடவில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் சிறப்பாக செயற்படுகின்றது.

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு வைட்டமின் சி அதிகமாக கிடைக்கின்றது.அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றது.

இது சரும ஆரோக்கியத்தை ஆதரிப்பதாகவும் சில சான்றுகள் காணப்படுகின்றது. எலுமிச்சை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதால், வயதான தோற்றம் ஏற்படுவதை தாமதமாக்குவதுடன் சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் உமவுகின்றது.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைசாறு கலந்து குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது செரிமான ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கின்றது.

மேலும் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து சிறுசீரக கல் உருவாவதையும் தடுக்க பெரிதும் துணைப்புரிவதுடன் சீறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts