Tamil News Channel

காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

ஆப்பிளுக்கு இணையான சத்தைக் கொண்ட, அதே சமயம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம் தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதேப் போல் கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால், இன்னும் நிறைய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பது தெரியுமா?

ஆம், கொய்யா இலைகளில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. முக்கியமாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் நிறைந்துள்ளன. மேலும் இந்த இலைகளில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளதால், இந்த இலையின் சாற்றினை உட்கொண்டால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அதுவும் இந்த இலையின் சாற்றினை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது எண்ணற்றல் மாற்றங்களை உடலில் காணலாம். இப்போது கொய்யா இலை சாற்றினைக் குடிப்பதால் பெறும் பயன்கள் என்னவென்பதைக் காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் கொய்யா இலை சாறு குடிப்பதால் கிடைக்கும் முதல் நன்மை என்றால் அது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகும். இந்த இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராட உதவி, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.

முக்கியமாக இந்த இலையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. எனவே பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், இந்த இலையின் சாற்றினை குடிப்பது நல்லது. செரிமானம் மேம்படும்.

கொய்யா இலையின் சாறு செரிமானத்தை மேம்படுத்த உதவும். இந்த இலைகளின் டானின்கள் அதிகம் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கின்றன. எனவே செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பவர்கள், கொய்யா இலைசாற்றினைக் குடித்து வர ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

செரிமானம் மேம்படும் கொய்யா இலையின் சாறு செரிமானத்தை மேம்படுத்த உதவும். இந்த இலைகளின் டானின்கள் அதிகம் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கின்றன. எனவே செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பவர்கள், கொய்யா இலைசாற்றினைக் குடித்து வர ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எடை இழப்புக்கு உதவும் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அதிகம் சிரமப்படாமல் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் உடலில் உள்ள அதிகப்படியான எடையை கொய்யா இலை சாறு உதவும்.

எப்படியெனில் இந்த இலைச்சாறு உடலின் மெட்டபாலிச விகிதத்தை சீராக்கும் மற்றும் கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறையை மேம்படுத்தும். கூடுதலாக கொய்யா இலைகளில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் என்பதால், இந்த சாற்றினைக் குடிக்கும் போது, நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts