கண்டி – கால்தென்ன விகாரை வளாகத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இருந்து போலி இலக்கத்தகடுடன் கூடிய மொன்டெரோ ரக ஜீப் வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் வாகனத்தை தெல்தெனிய காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்ட ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இலக்க தகடு மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக அந்த இலக்கத்தகடு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.







