ஆனமடுவை – பங்கதெனிய வீதியில் பல்லம பிரதேசத்தில் கால்வாயொன்றில் வீழ்ந்து வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயொன்றில் வீழ்ந்து கொங்கிறீட் கல்லொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.