2023 ம் ஆண்டிற்கான கா பொ த உயர்தர பரீட்சைகளில் கடந்த 10 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்ற தொகுதி பாடங்களில் ஒன்றான விவசாய விஞ்ஞான பாடத்தின் 2 ஆம் பகுதி வினாத்தாள் மூன்று மொழிகளிலும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவசாய விஞ்ஞான பகுதி 2 க்கான புதிய பரீட்சை திகதி முறையாக பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.