February 11, 2026
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்..! தாய் கைது!
Top Updates புதிய செய்திகள்

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்..! தாய் கைது!

May 2, 2024

புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து  இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் சடலம் இன்று (2) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *