ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை – தியகல பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 8 பேரும் வேனில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதுடன் குறித்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கினிகத்தேன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.