மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்திய காரணத்தினாலேயே இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நடிகர் சிரஞ்சிவியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியா- ஹைதராபாத்தில் நேற்றைய தினம்(22) நடந்து முடிவடைந்துள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய புகழ் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
மேலும் சிரஞ்சிவியின் சாதனை குறித்து பேசிய அமீர் கான், “ உங்களை போல நானும் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகன் தான். இந்த நிகழ்ச்சி குறித்து என்னிடம் கேட்ட போது, உடனே ஒப்புக் கொண்டேன். சிரஞ்சீவி சார் ஆடிய பாடல்களின் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். திறமையான நடன கலைஞர். இவர் ஒரு தனித்துவமான திறமைக் கொண்டவர்..” என புகழ்ந்து பேசியுள்ளார்.