பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து ஹிந்தியில் படங்கள் நடித்து வந்த கியாரா அத்வானி ராம் சரணின் நடிப்பில் வெளிவந்த வினய் விதேயே ராமா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
முதல் குழந்தை;
பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோற்றாவை காதலித்து கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், கர்ப்பமாக இருந்து வந்த நடிகை கியாரா அத்வானிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கியாரா – சித்தார்த் தம்பதிக்கு சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.





