மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர் ரஞ்சன் நீர் வெறுப்பு நோய் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளார். நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை போன்ற பாலூட்டும் விலங்குகளால் எமக்கு தொற்றக் கூடிய ஒரு நோயாகும். இந்த நோயானது கடி மற்றும் கீறல் மூலம் கடுமையாக தொற்றும் ஆற்றலைக் கொண்டதாகும்.
மற்றும் நாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு தடுப்புக்களை ஏற்றுவதன் மூலம் இந்த நோய் பரவலை தடுக்க முடியும். இந்த நோய் வெறுப்பு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் ஒருவர் மிக விரைவாக இறந்துவிடக்கூடும். ஆகையால் கவனமாக இந்த விடயத்தை கையாள வேண்டும் என அறிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2