கிளிநொச்சியில் தந்தை குத்தியதில் மகன் அவசர சிகிச்சை பிரிவில்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் தந்தை தனது சொந்த மகனை வீட்டில் இருந்த கிளாசை உடைத்து மகனின் தலையில் தாக்கியதினாள் படுகாயம் அடைந்தார் மகன்.
காயம் அடைந்தமகன் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தந்தை கசிப்பு அருந்தி உச்ச மது போதையின் விளைவினால் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இவ் தாக்குதல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது பிராந்தியர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
![]()