மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (25.10)  நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது அனுபவங்கள், மனித உரிமைகள் குறித்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலான பரிந்துரைகளை ஆணைக்குழுவுடன் பகிர்ந்து கொண்டதுடன் ஆணைக்குழுவின் தற்போதைய வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

புதிய ஆணைக்குழு வடமாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here