கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்தனர்.
சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக A9வீதியில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
காலை 10மணி முதல் அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி தேவை பொது வேட்பாளர் சரியான ஒருவர் நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்தார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Post Views: 2