கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையத்தை திறந்து வைத்த ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் மூன்று இளம் வியாபார முதலீட்டாளர்களுக்கு வியாபாரத் சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.
அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் அவர்கள் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்க விடயம்.
விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, விவசாயம், போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு வட மாகாணத்திற்கான பல திட்டங்களும் முன்வழியப்பட்டவை குறிப்பிடத்தக்க விடயம்.
அபிவிருத்தி குழு கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், அங்கையன் இராமநாதன், சிவஞானம் ஸ்ரீதரன், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன், கிளிநொச்சி மாவட்டத்தின் இராணுவ உயர் அதிகாரிகள் விமானப்படை உயரதிகாரிகள் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச திணைக்களத்தின் மாகாண மட்ட உயர் அதிகாரிகள் என்ன பலர் கலந்து கொண்டனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரித்தார்.