கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக இதுவரை மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் தெரிவித்துள்ளார்.
இன்று (3/14/2025) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு எதிர்வரும் 17ம் திகதி முதல் -20ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதே வேளை பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு எதிர்வரும் 24ம் திகதி முதல் -27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]