உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 05ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மே 30ம் திகதி தொடக்கம் ஜூன் 5ம் திகதி வரையான காலப் பகுதியை சுற்றாடல் வாரமாக அறிவித்துள்ள அரசாங்கம் நாட்டின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
அதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் நேற்றையதினம் காலை 9.00மணிக்கு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நாட்டி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
“பயனுறுதி மிக்க நிலப் பயன்பாட்டின் ஊடக நலம் நிறைந்த நாடு” எனும் தொனிப் பொருளில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.