கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இதில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த விசேட அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் காணி, மீள்குடியேற்றம், வாழ்வாதார உதவித் திட்டங்கள், அபிவிருத்தி செயற்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின்இணைப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், விடய உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.என்ற செய்தியினை எமது பிராந்திய செய்தியாளர் எமக்கு வழங்கியுள்ளார்.