இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான மத்திய நிலையம் பொது மக்கள் பாவனைக்காக இன்று சனிக்கிழமை (13.07.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
“மனுசக்தி”எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் மாவட்ட நீதிமன்றம் அருகில் இவ் மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Post Views: 2