July 8, 2025
கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக எம்மா க்ளோரியா நியமனம்….
Sports உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக எம்மா க்ளோரியா நியமனம்….

Oct 29, 2024

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் செல்வி எம்மா க்ளோரியாவை  இலங்கை கிரிக்கெட் சங்கம்  கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்துள்ளது.

ஆண்மையில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கு மாகாண பாடசாலை களுக்கிடையிலான  16 வயதிற்குட்பட்ட மகளிர் கடினமான டென்னிஸ் பந்து ( ர்யசன வுநnnளை டீயடட) கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நடுவராக  செல்வி எம்மா க்ளோரியா கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவுசெய்ததையடுத்து அந்த சுற்றுப் போட்டிலின் நடுவராக அவர் கடமையாற்றினார்.

மட்டக்களப்பு சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவியான இவர் மட்ஃ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராகவும் கடமையாற்றிவரும் இவர்  இலங்கை கிறிக்கெட் நடுவர் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நடுவர்களுள் ஒருவராவார்.

இவர் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மண்ணுக்கு  பெருமையடையச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *