கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (14/03/2025) காலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே சம்பவதினமான நேற்று காலை ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதையடுத்து ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]
Post Views: 2