நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants ) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants ) களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடஸ் (Delhi capitals) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
டெல்லி அணி சார்பாக மெக் லானிங் (mag lanning) 41 பந்துகளில் 55 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் மேக்னா சிங் (Meghna singh) 04 விக்கெட்டுக்களையும் ஆஷ்லே கேத்தரின் கார்ட்னர் (Ashleigh Katherine Gardner) 02 விக்கெட்டுக்ளையும் மன்னத் காஷ்யப்(Mannat Kashyap) 01 விக்கெட்டையும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants ) அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants ) அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
குஜராத் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆஷ்லே கார்ட்னர் (Ashleigh Gardner) 31 பந்துகளில் 40 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றார்.
டெல்லி அணிக்கு ராதா யாதவ் (Radha Yadav) மற்றும் ஜெஸ் ஜோனாசென் (Jess Jonassen) தலா 03 விக்கெட்டுக்கள் வீதமும்s, அருந்ததி ரெட்டி (Arundhati Reddy) 01 விக்கெட் வீதம் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ஜெஸ் ஜோனாசென் (Jess Jonassen) தெரிவானார்.
இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் ( Royal Challengers ) மற்றும் யூபி வாரியர்ஸ் (UP warriorz) ஆகிய அணிகள் மோதவுள்ளன.