Tamil News Channel

குஜராத்தை வீழ்த்திய UP warriorz அணி..!

ggm up

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் யூபி வாரியர்ஸ் (UP Warriorz) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் யூபி வாரியர்ஸ் (UP Warriorz ) 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யூபி வாரியர்ஸ் (UP Warriorz ) களத்தடுப்பை  தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants ) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குஜராத் அணி சார்பாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட்(Phoebe Litchfield ) 26 பந்துகளில் 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் சோஃபி எக்லெஸ்டோன்(Sophie Ecclestone) 03 விக்கெட்டுக்களையும்

ராஜேஸ்வரி கயக்வாட் (Rajeshwari Gayakwad) 01 விக்கெட்டயும் போட்டியில் யூபி வாரியர்ஸ் (UP Warriorz)   அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யூபி வாரியர்ஸ் (UP Warriorz)  அணி  15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்து போட்டியை தனதாக்கியது.

யூபி வாரியர்ஸ் (UP Warriorz)  அணி  சார்பாக துடுப்பாட்டத்தில் கிரேஸ் ஹாரிஸ் (Grace Harris) 33 பந்துகளில் 60 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றார்.

குஜராத் அணிக்கு தனுஜா கன்வர் (Tanuja Kanwar) 02 விக்கெட்டுகளையும் கேத்ரின் எம்மா பிரைஸ் (Kathryn Emma Bryce) மற்றும் மேக்ங்னாசிங் ( Meghna Singh) தலா 01 விக்கெட் வீதம் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக யூபி வாரியர்ஸ் (UP Warriorz)  அணியின்   கிரேஸ் ஹாரிஸ் (Grace Harris)  தெரிவானார்.

இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் ( Royal Challengers ) மற்றும் மும்பை இண்டியன்ஸ்  (Mumbai indians ) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts