அத்தியாவசிய தேவை தவிர்த்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் ஐப்பசி மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கோருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் ஐப்பசி மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.