உடன் அமுலுக்கு வரும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக BMD நிலுஷா பாலசூரியவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகமான ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனவே அந்த பதவிக்குத் தற்காலிகமாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். கடவுச்சீட்டுக்களில் கையொப்பமிடுவதற்கு, அந்த பதவி முக்கியமானதாகும்.
அதனடிப்படையில் தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றும் BMD நிலுஷா பாலசூரிய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.