பிரித்தானியாவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலைக்கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான நடைமுறைகளை விதித்திருந்தது.
அதன்படி வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினரையோ அல்லது நண்பரையோ பிரித்தானியாவுக்கு அழைத்து வர, குறைந்தபட்சம் ஆண்டுக்கு £38,700 பவுண்ஸ்கள் சம்பாதிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது இந்த முடிவில் சற்று மாற்றம் செய்து ஆண்டுக்கு குறைந்தபட்ச வருமானம் £29,000 பவுண்ஸ்கள் பெற வேண்டும் என அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த மாற்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
புதிய விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பொருந்தும் என்றும், ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளவர்கள் தற்போதைய, மிகக் குறைந்த, வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது குடும்ப உறுப்பினர் ஒருவரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர வேண்டுமெனில் அவரின் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியம் £18,600 பவுண்ஸ்களாக இருக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.