குப்பை மேட்டிலிருந்து கையெறி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜகிரிய, வெலிக்கட பிளாசா கட்டிடத்தின் குப்பை மேட்டில் இந்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் வெலிக்கட காவல்துறையினர் தெரிவித்தனர்.
கையெறி குண்டில் பொறிக்கப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கையெறிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
யாரோ ஒருவர் இதனைக் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.