Tamil News Channel

குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் ஏராளமான வெளிநாட்டுப்பறவைகள்!

bi

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டுப்பறைவகள்.

இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின்  சில  தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும்  இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில்  இருந்து ஏப்ரல் வரை இங்கு தங்கியிருக்கிறது.

இப் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி தங்கியிருக்கும் அதே வேளை இக் குளத்திலுள்ள மீன்களை பிடித்து உணவாக உண்ணுகின்றது. மரங்களில்  இவை தங்கியிருக்கும் போது வெள்ளை போர்வை போர்த்தியது போல இவ் மரங்கள் அழகாக காட்சி கொடுக்கிறது.

வருடா வருடம் அழையா விருந்தினர்களாக எங்களது பகுதிக்கு வருகைதந்து எங்கள் மண்ணில் தங்கியிருந்து செல்லும் இப் பறவைகள் முக்கியத்துவம் மிக்கதே என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts