கிரகங்களின் ஒவ்வொரு ராசி மாற்றமும், நட்சத்திரம் மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களிலும் தாக்கம் செலுத்தும்.

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, பிறந்திருக்கும் ஜூன் மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஜூன் மாதத்தில் குருபகவான் மிதுன ராசியில் அஸ்தமனமாகப் போகிறார்.

அதே சமயம், குருபகவான் ஜூன் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியை தரப்போகிறார். சில ராசிக்காரர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறப்போகிறது.

அந்த வகையில், ஜுன் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுக்கப்போகிறார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மேஷம் குருபகவானின் ஆசீர்வாதம் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான பலன்களை கொண்டு வருகிறது. வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகளை கூறலாம். வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு காரணமாக வீட்டில் செல்வம் சேர ஆரம்பிக்கும். வணிக மாற்றங்கள் பல ஏற்பட்டு, நிதி ஆதாயங்களும் அதிகமாக கிடைக்கும். இவர்களின் வாழ்க்கையில் இந்த மாதம் பொற்காலம் எனலாம்.
ரிஷபம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் ஆசீர்வாதம் சிறப்பான பலன்களை அளிக்கும். வணிக மாற்றங்கள் அதிகமாக இருப்பதால் அவர்கள் வாழ்க்கையில் நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கும். ஆரோக்கியமான முன்னேற்றம் பல காண்பார்கள். வியாபாரத்தில் உச்சத்திற்கே செல்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இரு மடங்காக அதிகரிக்கும்.
மகரம்  மகர ராசியில் பிறந்தவர்களுக்கு குரு ஆசீர்வாதம் இருமடங்காக கிடைக்கும். வாழ்க்கையில் சாதனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி ஆதாயங்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். காதலர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களின் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here