Tamil News Channel

குருவை மிஞ்சும் இயக்குநர் அட்லீ… அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!

25-67f508a2a90a4

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்வெல் திரைப்படங்களில் பணியாற்றிய VFX நிபுணர்களை அல்லு அர்ஜுனும், அட்லீயும் சந்தித்த காணொளியை வெளியிட்டு அடுத்த பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

AA22xA6

இயக்குநர் அட்லி தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்துள்ளார்.  ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள 6வது திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அல்லு அர்ஜுன் கதாநாயகளாக நடிக்கிறார். இது அல்லு அர்ஜுனின் 22வது படமும், அட்லீயின் 6வது படமாகும்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் LOLA VFXல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய நபர்கள் இப்படத்தின் திரைக்கதையை படித்துவிட்டு மிரண்டுபோயுள்ளனர்.

இப்போதைக்கு, இந்தப் படத்திற்கான தலைப்பு ‘AA22xA6’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், படத்தின் முன் தயாரிப்பு வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts