இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஹைலன்ட் பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 1 கிலோகிராம் நிறையுடைய ஹைலன்ட் பால்மா பொதியொன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 2,585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் 400 கிராம் நிறையுடைய ஹைலன்ட் பால்மா பொதியொன்றின் விலை 75 ரூபாயினால் குறைக்கப்பட்டு, 1050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.