கிளிநொச்சி – தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்று(13.06) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூடு ஒன்று, அதிக காற்று வீசி வரும் நிலையில் கலைந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது 18 மாணவர்களும் மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாணவர்களும் உடனடியாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.