பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டபகுதியில் 5ஏ தேயிலை மலைக்கு புற்களுக்கு மருந்து தெளிக்கும் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த 08 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (03.07) காலை இடம் பெற்றதாக குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகிய எட்டு ஆண் தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தேயிலை மலையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டை பருந்து ஒன்று கலைத்ததன் காரணமாக இந்த ஆண் தொழிலாளர்கள் எட்டு பேரும் குளவி கொட்டுக்கு இலக்கானதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post Views: 4