கற்றாழை என்பது சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் தருகிறது.
கூடுதலாக, இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளை இல்லாமல் செய்கிறது.
கரும்புள்ளிகள், பருக்கள், நிறமி, சுருக்கங்கள் மற்றும் பழுப்பு போன்ற சருமப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட உதவும்.
அந்த வகையில், கற்றாழை ஜெல்லை முகத்தில் போட்டால் என்ன பலன் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. கற்றாழை+ ரோஸ் வாட்டர்
குளிப்பதற்கு முன் கற்றாழையை ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் போட்டால் முகத்திலுள்ள அழுக்குகள் சுத்தமாகி, பார்ப்பதற்கு பளபளப்பாக மாறும். முகத்தில் தடவிய பின்னர் லேசாக கைகளால் மசாஜ் செய்யவும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவவும்.
2. கற்றாழை+ தேன்
குளிப்பதற்கு முன் கற்றாழையை தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். தேன் முகத்தில் இருக்கும் ஈரப்பதனை நிலைக்கச் செய்யும். அத்துடன் பருக்கள், தழும்புகள், நிறமி, சுருக்கங்கள் மற்றும் பழுப்பு நிறத்தைப் போக்கும். இரண்டையும் கலந்து லேசான கைகளால் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். சுமார் 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
3. கற்றாழை+ கடலை மாவு
கற்றாழையுடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவலாம். கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்கு மற்றும் கூடுதல் எண்ணெய் தன்மையை அகற்றும். ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 தேக்கரண்டி கற்றாழையைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனை முகத்தில் தடவி, சுமாராக 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். முகம் பிரகாசிக்கும்.