December 13, 2025
குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பாதுகாப்பது எப்படி? இந்த தவறை செய்யாதீங்க..!
தொழில் நுட்பம்

குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பாதுகாப்பது எப்படி? இந்த தவறை செய்யாதீங்க..!

Jan 31, 2025

குளிர்காலத்தில் லேப்டாப்பினை எவ்வாறு பாதுகாப்பாக வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் மின்னனு சாதனங்களை சரியாக பராமரிக்கவில்லையெனில் மிகப்பெரிய சேதம் ஏற்படும். இது லேப்டாப்பிற்கு அதிகமாகவே பொருந்தும்.

குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பயன்படுத்தும் போது ஒருபோதும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தவறுகள் என்னென்ன?

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால், இதனை குளிர்ந்த அறையிலோ அல்லது காரிலோ நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் ஈரப்பதம் உருவாகி சர்க்யூட் ஷார்ட் செய்து சேதமாகுமாம். ஆகவே எப்பொழுதும் சாதாரண வெப்பநிலையில் தான் வைக்க வேண்டும்.

வெப்பமான இடத்திற்கு லேப்டாப்பை கொண்டு சென்ற உடனே பவர் பட்டனை அழுத்தி ஆன் செய்யக்கூடாது. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருந்து பின்பு, ஆன் செய்யலாம்.

ஹீட்டருக்கு அருகில் லேப்டாப்பை வைக்க வேண்டாம். இவ்வாறு வைத்தால் லேப்டாப்பின் உள்ளே வெப்பநிலை விரைவாக சென்று, மதர் போர்டும், பேட்டரியும் சேதம் ஏற்பட்டுவிடும்.

வெப்பத்தை தக்க வைக்கும் போர்வைக்கு அடியில் எப்பொழுது லேப்டாபை வைக்க வேண்டும். இதனால் அதிகமாக சூடாகும். மேலும் லேப்டாப்பை எப்போதும் தடிமனான தட்டையான மேற்பரப்பில் தான் வைக்க வேண்டும்.

பயணம் மேற்கொள்ளும் போது லேப்டாப்பை நன்றாக இன்சுலேட் செய்யப்பட்ட கேஸில் வைக்க வேண்டும்.

குளிர்காலத்தில், வறண்ட காற்று காரணமாக ஸ்டேடிக் சார்ஜ் அதிகரிக்கிறது. இது லேப்டாப் வன்பொருளை சேதப்படுத்தும். இந்த நேரத்தில் லேப்டாப்பைப் பயன்படுத்தும்போது ஆன்டி ஸ்டேடிக் சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *