சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர்.
அதற்க்கு “ரெட்ரோ” என பெயரிடப்பட்டுள்ளதுடன் அதற்கு வயது இரண்டு எனவ்ய்ம் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
ரீசஸ் குரங்கு மூலம் மருந்துவ பரிசோதனை விரைவுபடுத்த முடியும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் பரிசோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரீசஸ் குரங்கு குளோன் செய்யப்பட்டதற்கு விலங்குகள் நலக் குழு ஒன்று ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
பாலூட்டி இனங்களில் பாலின கலப்பு மூலம் தந்தை மற்றும் தாயின் மரபணுக்கள் இணைந்து சந்ததியை உருவாக்கும், குளோனிங் முறையில் ஒரு விலங்கின் மரபணு மாதிரி நகலை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்படுகிறது.
அத்துடன், குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி என்ற செம்மறி ஆடு, பிரிட்டனில்,1996 ஜூலை 5ல் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.