பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், 25,000ம் ரூபாவிற்கு தனது இரட்டை குழந்தைகளை விற்பனை செய்துள்ளார்.
இதன் காரணமாக குழந்தைகளை விற்பனை செய்த தாயும் வாங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.
அதில் ஒரு குழந்தையை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் , மற்றைய குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் களனி பிரதேசத்திலும், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது ,குறித்த தாய் கொழும்பு – காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அந்த குழந்தையின் தாய் ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்தமையும் குறிபபிட்தக்கது.