கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணி தொடர்பில் வெளியான தகவல்..!!
உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் போட்டியில் இதுவரை கிண்ணத்தை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை பயனர்கள் கூகுளில் அதிகளவில் தேடியுள்ளனர்.
இந்த இரு அணிகளும் கிண்ணத்தை வெல்வதற்காகக் கடுமையாகப் போராடியதால் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
![]()