கூகுள் நிறுவனம் 15 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து தம்பதிக்கு 26,172 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் செய்த தவறு
சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். பல போராட்டங்களுக்கு பின் கிட்டதட்ட 15 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் இப்போது அத்தம்பதிக்கு பலன் கிடைத்துள்ளது.
இந்த இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி சிவான்- ஆடம் ராஃப். இவர்கள் தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டு விலகி, ‘ஃபவுண்டெம்’ (Founder) என்ற விலை ஒப்பீட்டு இணையதளத்தை 2006இல் சொந்தமாக தொடங்கினர்.
இதன் பின்னர் கூகுளில் “விலை ஒப்பீடு” மற்றும் “ஷாப்பிங்” போன்ற முக்கிய சொற்களுக்கான தேடல்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவில் இவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் மாறாக அதிர்ச்சி தான் பதிலாக வந்துள்ளது.
இந்த நிலையில் அந்த தம்பதி எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே அவர்களின் தளத்தை கூகுள் மதிப்பிட்டது. இதற்கான சரியான காரணத்தை அறியாத அந்த தம்பதியினர் தங்கள் வலைதளத்தில் ஏதேனும் பிழை இருக்கலாம் என நினைத்துள்ளனர்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூட கூகுள் அபராதத்தை நீக்கவில்லை. இதனால் ஃபவுண்டெமின் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்தனர். ஆனால் கூகுள் அல்லாத மற்ற தேடுபொறிகள் (search engines) ஃபவுண்டெமை சாதாரணமாக இயங்கியது.